online@kalkiweekly.com

வித்தியாச விநாயகர்கள்

-வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்

குளத்தில் கிடைத்தவர்!

மதுரை, ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி சன்னிதி பிராகாரத்தில் உள்ளது முக்குறுணி விநாயகர் சன்னிதி. தெற்கு நோக்கி வீற்றிருக்கும் இவருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று 27 கிலோ அரிசியால் செய்யப்பட்ட ஒரே கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த விநாயகர் சிலை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தைத் தோண்டும்போது, கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விநாயகர் சன்னிதி 16ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும்.

11 வடிவங்களில் விநாயகர்

திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாசூர் ஸ்ரீ வாசீஸ்வரர் கோயிலில் 11 வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட, ‘விநாயகர் சபை’உள்ளது. இந்த விநாயகர்களை பிரதிஷ்டை செய்து, இழந்த செல்வங்களை திருமால் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

இந்த 11 விநாயகர்களும் ஒரே இடத்தில் சிறிய மண்டபத்தின்கீழ் காட்சி தருகின்றனர். மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறம் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப்புறத்தில் ஐந்து விநாயகர்களும் காட்சி தருகின்றனர். அருகில் கேது பகவான் (கேது கிரகத்துக்குரிய தெய்வம் விநாயகர்) காட்சி தருகிறார்.

வெயிலில் காய்பவர்!

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நான்கு கால் மண்டபத்தில் விநாயகர் அருளுகிறார். இந்த சன்னிதி சூரிய ஒளி விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதிக்கு விமானம் எழுப்ப முயற்சித்தபோது, பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. எனவே, வெயிலே இவருக்கு உகந்ததெனக் கருதி, வழிபடப்படும் இந்த கணபதியை, ‘வெயிலுகந்த விநாயகர்’என அழைக் கின்றனர். பார்வதியின் தந்தை தட்சன் செய்த யாகத்தில், ஈசனின் அனுமதியின்றி சூரியன் கலந்து கொண்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க, சூரியன் இந்த விநாயகரை வணங்கி தோஷம் நீங்கினார். இதனாலும், இப்பெருமானுக்கு ‘வெயிலுகந்த விநாயகர்’என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணம் சொல்கிறது.

ஆல மரத்தில் விநாயகர்!

சென்னை, அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர் விடுதிக்குப் பின்புறமுள்ள ஆலமரத்தில் சுயம்பு மூர்த்தியாக விநாயகர் அருள்பாலிக்கிறார். சேலம், ஆத்தூர் விநாயகர் கோயிலிலும், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் – கோவில் பட்டி ரோட்டிலுள்ள ஒரு ஆலமரத்திலும் இதைப்போலவே சுயம்பு விநாயகர் காட்சி தருகின்றனர். இது ஓர் அபூர்வ அமைப்பாக விளங்குகிறது.

ஒன்பது அங்குல விநாயகர்!

தஞ்சை மாவட்டம், திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயிலில் அருளுகிறார், ‘சுவேத விநாயகர்.’இந்த வெள்ளைநிறப் பிள்ளையார் ஒன்பது அங்குல உயரமே உள்ளார். இந்தச்சிலை கடல் நுரையால் ஆனது. இவருக்கு பச்சைக் கற்பூரம் மட்டுமே சாத்தப்படுகிறது.

18 அடி ஆழத்தில் விநாயகர்!

விருத்தாசலம், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆழத்துப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த சன்னிதி. இவரது சன்னிதிக்கு தனியாகக்கொடி மரமும் உண்டு.

நர்த்தன விநாயகர்

‘காளிங்கன்’என்ற பாம்பின் மீது ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுவதை ‘காளிங்க நர்த்தனம்’என்பர். அதுபோல, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் அமைந்த சுந்தரர் சன்னிதிக்கு எதிரில் பாம்பின் தலைமீது காலைஊன்றி, வாலை கையில் பிடித்த கோலத்தில் காட்சி தரும் கணபதியை, ‘நர்த்தன விநாயகர்’என்கின்றனர்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

0
-ஜி.எஸ்.எஸ். கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...
spot_img

To Advertise Contact :