online@kalkiweekly.com

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் ‘லாபம்’ ரிலீஸ்!

ச. பத்மநாபன்.

நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக நாளை தியேட்டர்களீல் வெளீயாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தன் ஒவ்வொரு படங்களிலும் கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் எஸ்பி ஜனநாதன், ‘லாபம்’ படத்திலும் சாதாரண மக்களிடம் கார்ப்பரேட் கம்பெனிகள் காற்றுடன் உழைப்பையும் சுரண்டுகிறது என்பதை காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாகவும் வேறு சில கெட்டப்புகளிலும் நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடி நடிகை ஸ்ருதிஹாசன். மேலும் இப்படம் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு!

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘லாபம்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த நிலையில், இப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை (செப்டம்பர் 9) ‘லாபம்’ திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாவதால் பண்டிகையுடன் சேர்த்து ‘லாபம்’ படத்தையும் இணைந்து கொண்டாட ரசிகர்கள் தயாராகி உள்ளனர் .

 

 

 

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

இந்திய எல்லையில் அஜீத்: ராணுவ வீரர்களுடன் மாஸ் போட்டோஸ்!

0
நடிகர் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. மேலும் அப்படத்தின் அறிமுக பாடல் ’நாங்க வேற மாதிரி’ வேறு லெவலில் சூப்பர்ஹிட் ஆகியது. இந்நிலையில் வலிமை படத்தின்...

கனவு காணுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி கிட்டும்!

0
மு. தமிழரசி, அம்பத்தூர். குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கனவு காண்கின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில்தான் கனவுகள் வரும் என்பதால், பெரும்பாலான கனவுகள் நமக்கு நினைவில் கூட இருப்பதில்லை. ஆனால், கனவுகள் பல...

கலையரசி அருள்பெற்ற இசையரசிக்கு கொலுவில் கவுரவம்!

0
பேட்டி: எஸ்.கல்பனா, படங்கள்: ஶ்ரீஹரி.   கலைகளுக்கு அரசியான அந்த சரஸ்வதி தேவிக்கு மானுட வடிவம் கொடுத்தால், நம் மனக்கண்ணில் எம்.எஸ் அம்மாதான் தோன்றுகிறார். அதனாலேயே இந்த வருட கொலுவுக்கு ‘தீம்’ சப்ஜெக்டாக அவரது வாழ்க்கையை எடுத்து...

ஐபிஎல் பைனல் போட்டியில் சிஎஸ்கே: தகுதிச்சுற்றில் தோனி அபாரம்!

0
-கார்த்திகேயன். ஐபிஎல் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறூதிப் போட்டிக்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தகுதி பெற்று சூப்பர் சாதனை படைத்துள்ளது. டெல்லிஅணிக்குஎதிராக சிஎஸ்கே அணி நேற்று ( அக்டோபர்...

சரஸ்வதியும் (பரா)சக்தியும்!

0
- ஆர்.மீனலதா, மும்பை நவராத்திரி ஒரு தனித்துவமான முழுமையான பண்டிகை. காரணம்...? தெய்வங்கள், குருக்கள், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள், குழந்தைகள், இசை மற்றும் பிற கருவிகள், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகியவை இந்த பண்டிகையில்தான் சமமாக பூஜிக்கப்படுகின்றன. நவமி...
spot_img

To Advertise Contact :