online@kalkiweekly.com

spot_img

விலை போகும் அதிகாரம்

தலையங்கம்

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரகங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சில ஊர்களில் ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் ஏலமிடப்பட்டதாக வெளி வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்வு செய்வது எனப் பலவிதமான முறை கேடுகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முறையிலிருந்து சில அம்சங்களில் வித்தியாசமான தேர்தல். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த நபர், தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பல வகையான திட்டங்களுக்குச் செலவிடுவார். உள்ளாட்சியில் மக்கள் தங்களது பகுதிக் குத் தேவைகள் என்ன என விரிவாகப் பேசி, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் கேட்டுப் பெறமுடியும். `உள்ளாட்சி அரசாங்கம்தான் மக்களுக்கு நெருக்கமான அரசாங்கம். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு என்பது நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் கிராமம் நகரத்திற்கு நிலையான வளர்ச்சியைத் தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது, இது பஞ்சாயத்து ராஜ் சட்டம் அளித்திருக்கும் உரிமை. ஆனால் சில கிராமங்களில் உள்ளாட்சி மன்றங்களின் முக்கியத்துவம் அறியாமல் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, தலைவர் பதவிகளில் சாதிரீதியான நபர்களுக்கும், காசு கொடுப்பவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள்.

அனைத்துக் கட்சிகளுமே இத்தகைய ஏல நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றபோதும் கட்சிகளின் செல்வாக்கையும் தாண்டி ஊர் மக்கள் ஒன்றாய் கூடி இப்படி ஏலங்களை நடத்துவது வாடிக்கையாகி யிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் செலவழிக்கப்படும் லட்சக்கணக்கான ரூபாயை ஏலத்தின் மூலமாக மிச்சப்படுத்தி அந்தப் பெருந்தொகையைக் கொண்டு ஊர் நலனுக்குச் செலவிடலாம் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடும் தொகை தேர்தல்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரக அளவிலான தேர்தல்களில் இவ்வளவு பணம் செலவழிப்பவர் அடுத்து வரும் ஆண்டுகளில் அவருக்குக் கிடைக்கும் ஆதாயங்களுக்கான முதலீடாகவே அதைக் கருதுகிறார்கள் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது மதிப்புக் குரியது என்ற பொதுவான எண்ணத்தில் தவறில்லை. ஆனால், அவ்வாறு போட்டியின்றித் தேர்வாவதன் பின்னணியில், பதவிகளை ஏலத்துக்குவிடும் முறையானது அரசியல் சாசனம் வாக்காளர்களுக்கு அளித்த உரிமையை அவமதிப்பதாகும்.

டி.என்.சேஷன் இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த போதுதான், தேர்தல் அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் உள்ளது, நியாயமான தேர்தல் நடப்பதற்குத் தேர்தல் அதிகாரிகள் எந்தவிதத்தில் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் எனத் தெரியவந்தது. ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போதும் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரியும் உண்மை. தேர்தல் விதிமீறல்கள் சமூக வலைதளங்களில் காணொளி காட்சிகளாக வெளியாகின்றன. விதிமீறலில் ஈடுபடும் நபரின் பெயர், கிராமத்தின் பெயர் எனப் பல ஆதாரங்கள் தெளிவாகத் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மாநிலத் தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள், பணியில் உள்ள ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியின் நிலைக்கு நிகரானது. ஆனால் இத்தகைய முக்கியத்துவத்துடன் ஆணையம் செயல்படுகிறதா என்பதுதான் இப்போது நம்முன் எழும் கேள்வி.

இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு காலக்கெடு முடிந்துவிட்டது. எங்கெங்கு போட்டியின்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாரோ அங்கெல்லாம் பதவி ஏலம் விடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில், தீவிர விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஏலம் விடப்பட்டது உறுதியாகும் பட்சத்தில், தேர்தலை நிறுத்து வதும் மறு தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் ஆணையிட வேண்டும்.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகளே, துணிவுடன் செயல்படுங்கள். நமது கிராம மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை களை விலைபோகத் துணை போகாதீர்கள்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரகங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப் பட்ட நாளிலிருந்து , சில ஊர்களில் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் ஏலமிடப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கக்கின்றன. அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்வது என பலவிதமான முறைகேடுகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முறையில் இருந்து சில அம்சங்களில் வித்தியாசாமான தேர்தல். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்காளர் தேர்ந்தெடுத்த நபர், தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை பலவகையான திட்டங்களுக்கு செலவிடுவார். உள்ளாட்சியில் மக்கள் தங்களது பகுதிக்கு தேவைகள் என்ன என விரிவாகப் பேசி, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் கேட்டுப்பெறமுடியும் `உள்ளாட்சி அரசாங்கம்தான் மக்களுக்கு நெருக்கமான அரசாங்கம். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு என்பது நேரடியாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் கிராமம் நகரத்திற்கு நிலையான வளர்ச்சியைத் தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது, இது பஞ்சாயத்து ராஜ் சட்டம் அளித்திருக்கும் உரிமை. ஆனால் சில கிராமங்களில் உள்ளாட்சி மன்றங்களின் முக்கியத்துவம் அறியாமல் நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, தலைவர் பதவிகளில் சாதி ரீதியான நபர்களுக்கும், காசு கொடுப்பவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள்.

அனைத்துக் கட்சிகளுமே இத்தகைய ஏல நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றபோதும் கட்சிகளின் செல்வாக்கையும் தாண்டி ஊர் மக்கள் ஒன்றாய்க் கூடி இப்படி ஏலங்களை நடத்துவது வாடிக்கையாகயிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் செலவழிக்கப்படும் லட்சக்கணக்கான ரூபாயை ஏலத்தின் மூலமாக மிச்சப்படுத்தி அந்தப் பெருந்தொகையைக் கொண்டு ஊர் நலனுக்குச் செலவிடலாம் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடும் தொகை தேர்தல்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரக அளவிலான தேர்தல்களில் இவ்வளவு பணம் செலவழிப்பவர், அடுத்துவரும் ஆண்டுகளில் அவருக்குக் கிடைக்கும் ஆதாயங்களுக்கான முதலீடாகவே அதைக் கருதுகிறார்கள் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் போட்டியின்றித் தேர்வுசெய்யப்படுவது மதிப்புக்குரியது என்ற பொதுவான எண்ணத்தில் தவறில்லை. ஆனால், அவ்வாறு போட்டியின்றித் தேர்வாவதன் பின்னணியில், பதவிகளை ஏலத்துக்கு விடும் முறையானது அரசியல் சாசனம வாக்காளர்களுக்கு அளித்த உரிமையை அவமதிப்பதாகும்.

டி.என்.சேஷன் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தபோதுதான், தேர்தல் அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் உள்ளது, நியாயமான தேர்தல் நடப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் எந்தவிதத்தில் தங்களது அதிகாரங்களை பயன்படுத்தலாம் என தெரியவந்தது.

ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையம் இப்போதும் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவில்லை என்பது வெளிப்படையாக் தெரியும் உண்மை.. தேர்தல் விதிமீறல்கள் சமூகவலைத்தளங்களில் காணொளி காட்சிகளாக வெளியாகின்றன. விதிமீறலில் ஈடுபடும் நபரின் பெயர்,கிராமத்தின் பெயர் என பல ஆதாரங்கள் தெளிவாகத்தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மாநில தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள், பணியில் உள்ள ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியின் நிலைக்கு நிகரானது. ஆனால்  இத்தகைய முக்கியத்துவத்துடன் ஆணையம் செயல்படுகிறதா? என்பது தான் இப்போது நம் முன் எழும் கேள்வி..

இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு காலக் கெடு முடிந்துவிட்டது. எங்கெங்கு போட்டியின்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ அங்கெல்லாம் பதவி ஏலம் விடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளும் வகையில், தீவிர விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஏலம் விடப்பட்டது உறுதியாகும்பட்சத்தில், தேர்தலை நிறுத்துவதும் மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆணையிடவேண்டும்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளே துணிவுடன் செயல்படுங்கள். நமது கிராம மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை விலை போகத் துணை போகாதீர்கள்

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

பிரதமரே கருணை காட்டுங்கள்

1
தலையங்கம் ஒன்றிய அரசு, சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. டீசல் விலை  100 ரூபாயை நெருங்கிவிட்டது. பெட்ரோல்,  டீசல் விலையை...

பெருமிதம் கொள்வோம்

0
  கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் முழு உலகமே இறங்கியிருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்திலிருக்கும் நமக்கு இது மிகப்பெரிய சவால். ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தடுப்பூசிகளைப்...

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....

400 ஆண்டுகால வியாபாரம்

0
வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும் சோம.வள்ளியப்பன் பங்குச்சந்தை ஒரு வகை சூதாட்டம் தானே! பத்திரிகைகள் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரைகள் எழுதுவதாகவும் அறிகிறேன். பங்கு சந்தை கள் ஏன், எப்படி, எங்கு. என்று தோன்றின?   - திருவரங்க வெங்கடேசன்,...

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்-15 எஸ்.சந்திரமௌலி "டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள்...
spot_img

To Advertise Contact :