வெர்ஜீனியாவில் விநாயகர் சதுர்த்தி

வெர்ஜீனியாவில் விநாயகர் சதுர்த்தி
Published on

-பானு பெரியதம்பி,சேலம்.

நானும் என் கணவரும் வெர்ஜீனியாவில் உள்ள என் மகள் வீட்டில் இருந்த போதுவிநாயகர் சதுர்த்தி கொண்டாட நேர்ந்தது. அங்குள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று , குழந்தைகள் பிள்ளையார் சிலை செய்வதற்கு ஏற்றார்போல கலர் கலர் களிமண் வைத்து [clay] இருப்பார்கள். பிள்ளையார் சிலை செய்வதற்கு நம் பெயரை ரெஜிஸ்டர் செய்து கொள்ளவேண்டும். சதுர்த்தி வருவதற்கு முந்தைய ஞாயிறு அன்று நாம் குழந்தைகளை அழைத்துச் சென்றால், அவர்கள் சிலை செய்வதற்கான பொருட்களைத் தருவார்கள்.

செய்து முடித்த பின், சிறிது பூக்கள், மற்றும் மஞ்சள் அரிசி தூவி குழந்தைகள் கையில் தந்து விடுவார்கள் . அதைக்கொண்டு வந்து சதுர்த்தி அன்று வீட்டில் பூஜையில் வைத்துக் கொள்ளலாம். அவர்களே செய்த சிலை என்பதால் மிகுந்த ஆர்வத்தோடும், அர்பணிப்போடும் பிள்ளையார் பாடல்களைப் பாடி பேரக்குழந்தைகள் மகிழ்ந்ததை கண்டு மிகவும் நெகிழ்ந்தோம். பூஜை முடிந்த பின், அருகில் நீர் நிலைகள் ஏதும் இல்லாததால் வீட்டில் இருக்கும் மரத்தின் அடியில் வைத்து விடுகின்றனர். மழையில் நனைந்து கரைந்து விடுகின்றது.

நம் பண்டிகைகளை மகிழ்வோடு கொண்டாடி, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நம் இளைய தலைமுறையினரை பார்க்கும் பொழுது மனம் பெருமை அடைகின்றது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com