வேப்பமர கயிற்று ஊஞ்சல்!

வேப்பமர கயிற்று ஊஞ்சல்!
Published on

என் பேத்தி ஆஷிதாவிடம் என்னுடைய பள்ளிப் பருவ  கதைகளை அவ்வப்போது சொல்லுவேன். அவளும் ஆசையோடு ரசித்துக்கொண்டே கேட்பாள். ஒரு பொங்கல் விடுமுறையின் போது அவளிடம்," தை பிறந்ததும்  வாசலில் இருந்த வேப்பமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவோம். அதிலும் நின்று கொண்டே எவ்வளவு தூரம் ஸ்பீடாக ஆடுவது என்ற போட்டியே இருக்கும்'' என் கூறினேன்.

உடனே ஆஷிதா," பாட்டி இந்த குடியிருப்பில் மரங்களே இல்லை.அதனாலே கயிறு ஊஞ்சல் கட்டமுடியாது. அதனாலே இந்த கூடை உஞ்சலிலேயே நானும் உங்களை மாதிரி நின்னுகிட்டே ஆடறேன் பாருங்க…" எனக் கூறிக்கொண்டே ஆடிய போது அவளுடைய செல்ல குறும்பை ரசித்துக்கொண்டே எடுத்த கிளிக் தான் இந்த போட்டோ..

– பானு பெரியதம்பி, சேலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com