ஸ்பெயினில் ஜல்லிக்கட்டு: தடை விதிக்கக்கோரி மக்கள் போராட்டம்!

ஸ்பெயினில் ஜல்லிக்கட்டு: தடை விதிக்கக்கோரி மக்கள் போராட்டம்!

ஸ்பெயினில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியான காளை சண்டைக்கு தடைவிதிக்கக் கோரி, அந்நாட்டு மக்கள் போராட்டமும் பேரணியும் நடத்தினர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது போன்று, ஸ்பெயின் நாட்டில் காளைகளை அடக்கும் பாரம்பரியமான காளைச்சண்டை விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த போட்டிக்கு தடைவிதிக்ககோரி அந்நாட்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் போர்ராட்டம் நடத்தினர். இந்த விளையாட்டில் காளைகள் அதிகமாக துன்புறுத்தப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் காளைச்சண்டைக்கு தடை விதிக்க கோரி, முரசுகளை ஒலித்துக்கொண்டு பேரணி நடத்தினர. இதில் பங்கேற்றவர்கள், ''நாட்டின் கலாச்சாரம் என்று காளைச் சண்டையை இனிமேலும் தொடரக்கூடாது'' என்று முழுக்கமிட்டார்கள்.

ஸ்பெயின் நாட்டில் கடந்த வருடம், இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதில், 47% நபர்கள் அதனை தடைவிதிக்க விதிக்குமாறும், 18.6% மக்கள், தடை விதிக்க வேண்டாம் என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com