online@kalkiweekly.com

ஹேரம்ப கணபதி

-ஹேரம்ப கணபதி

முத்கல புராணம் விவரிக்கும் 32 வகையான கணபதி திருமூர்த்தங்களில் ஒன்று, ஸ்ரீ ஹேரம்ப கணபதி. ஐந்து முகங்களுடன் திகழ்வதால் இவருக்கு, ‘ஸ்ரீ பஞ்சமுக விநாயகர்’என்ற சிறப்பும் உண்டு.

‘அடியவர்களுக்கு நன்மை பயக்கும் அனைத்தும் தம்மிடம் உண்டு’ என்பதை உணர்த்தும் வகையில் அங்குசம், கதாயுதம், கரும்பு வில், சங்கு, சக்கரம், பாசம், தாமரை மலர், நெற்கதிர், உடைந்த தந்தம், ரத்தினக் கலசம் ஆகியவற்றை ஏந்தியபடி, பத்து திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார் ஹேரம்ப கணபதி.

எல்லோருக்கும் மேலான கடவுளாகத் திகழ்வதால், மிருகங்களில் தலைசிறந்த சிம்மத்தை (சிங்கத்தை) இவர் தமது வாகனமாகக் கொண்டுள்ளார். அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீ ஹேரம்ப கணபதியின் திருவடி களை நேபாளம் மற்றும் வங்காளத்தில் நிறைய தரிசிக்கலாம்.

தமிழகத்தில் நாகப்பட் டினம், திருவானைக்காவல் மற்றும் திருவொற்றியூர் ஆகிய தலங்களில் ஸ்ரீ ஹேரம்ப கணபதியை தரிசிக்க முடியும்!

– சௌமியா, பழைய பல்லாவரம்

விநாயகர் விரதம்

விநாயகர் அருளைப் பெற பதினொரு வகையான விரதங்களை நமது முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கிறார்கள். அவற்றைப்பற்றிக் காண்போம்.

வெள்ளி விரதம் : வைகாசி மாத, வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஒரு வருடகாலம் மேற்கொள்வது இந்த விரதம். இதனால் குடும்பத்தில் வளம் கொழிக்கும்.

செவ்வாய் விரதம் : ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஓராண்டுவரை செய்வது இந்த விரதம். இதனால் செவ்வாய் தோஷ சிக்கல்கள் நீங்கும்.

சித்தி விநாயக விரதம் : புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் விரதம் இருப்பது. எதிரிளை அடக்கும் விரதம் இது.

சதுர்த்தி விரதம் : பிரதிமாதம் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதமிது. இதனால் காரியத்தடைகள் நீங்கும்.

தூர்வா கணபதி விரதம் : கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்திச் செய்வது இந்த விரதம். இதனால் பிள்ளைப்பேறு கிடைக்கும்.

குமார சஷ்டி விரதம் : கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டிவரை இருபத்தியொரு தினங்கள் மேற்கொள்வது இந்த விரதம். குடும்ப நலனுக்காகச் செய்யப்படுகின்ற இந்த விரதத்துக்கு, ‘பிள்ளையார் நோன்பு’என்ற பெயரும் உண்டு.

தூர்வாஷ்டமி விரதம் : புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, விநாயகரை ஓர் ஆண்டுகாலம் அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது இந்த விரதம். இதனால் உடல் வலிமை பெறும்.

விநாயக நவராத்திரி : ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜை செய்வது விநாயக நவராத்திரி.

வெள்ளிப் பிள்ளையார் விரதம் : ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதமிருப்பது. பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம், நினைத்ததை நிறைவேற்றித்தரும் அற்புதம் வாந்தது.

அங்காரக சதுர்த்தி விரதம் : ‘ஏழை ஒருவர், மாசி தேபிறை செவ்வாயில் தொடங்கி, ஒரு வருடம் விநாயகரை பூஜை செய்து வந்தால், அவர் பலம் பெறுவார்’என்று விநாயகர் வழிபாட்டு முறைகள் சொல்கின்றன. இந்த விரதத்தை மேற்கொண்ட அங்காரகனுக்கு நவக்கிரகங்களில் ஒருவராகும் தகுதியைத் தந்தார் விநாயகர். விநாயகரை முழு மனதோடு போற்றி ஆராதித்து அவர் அருளைப் பெறுவோமாக!

– இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

0
-ஜி.எஸ்.எஸ். கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...
spot_img

To Advertise Contact :