அந்தரத்தில் பறந்தாள்!

அந்தரத்தில் பறந்தாள்!

என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நாங்கள் வெளியே செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தோம். என் மாமியார் கிளம்புவதற்கு சிறிது நேரம் ஆனது. அச்சமயம் என் மகள் ஹாலில் இருந்த சோபாவில் ஏறி குதித்து கொண்டிருந்தாள். "இப்படி செய்யாதே" என்று தாத்தா பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. தொடர்ந்து குதித்துக் கொண்டிருந்தாள். அப்போது நான் சட்டென்று என் கையில் வைத்திருந்த கேமராவில் அவளை அந்தரத்தில் இருப்பது போல புகைப்படம் எடுத்தேன். அதைக் கண்டு அவளுக்கு மிகவும் சந்தோஷம் "எப்படி அம்மா?" என்று அவள் மகிழ்ச்சியுடன் பார்த்தாள்.என் மகள் எப்போதும் அதிகம் குறும்பு செய்வாள். ஆனால் யாருக்கும் எந்த வருத்தமும் வராத அளவுக்கு குறும்பு செய்வாள். என் மகள் செய்த குறும்பு.

-உஷா முத்துராமன், திருநகர்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com