சிஎஸ்கே அணி வீரர் தீபக் சாஹர்: காதலியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

சிஎஸ்கே அணி வீரர் தீபக் சாஹர்: காதலியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று முன்தினம் பஞ்சாப் அணியுடன் நடைபெற்றது. இதில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கிடையில் இப்போட்டியில் சுவராஸ்யமான சம்பவம் நடந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், ஓட்டல் ஒன்றில் தன் காதலி ஜெயா பரத்வாஜூக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்து இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் புடைசூழ கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவினை அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில் தோனி, ரெய்னா உள்ளிட்ட சக வீரர்கள் தீபக் சாஹர் முகத்தில் கேக், ஜுஸ் ஊற்றினர். இதனால் கேக் அப்பிய முகத்துடன் தீபக் சாகர் முகத்தை மூடி சிரித்தபடி உட்கார்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com