தமிழகத்தின் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தின் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவ்க கல்லூரிகளீல் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை எழும்பரில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறீயதாவது:

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லுரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கூடுதலாக 1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை மருத்துவ கல்லுரிகளில் தலா 150 இடங்களுக்கும் ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மருத்துவ கல்லுரிகளில் தலா 100 இடங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியள்ளது. மேலும், அம்மா மினி க்ளினிக் என்பது விளம்பர நோக்கத்தில் மட்டுமே செய்யப்பட்டது. எங்கும் இத்திடம் பயன்பாட்டில் இல்லை.

-இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணீயம் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com