பாராலிம்பிக்ஸ் போட்டி: டோக்கியோ புறப்பட்டனர் இந்திய வீரர்கள்!

பாராலிம்பிக்ஸ் போட்டி: டோக்கியோ புறப்பட்டனர் இந்திய வீரர்கள்!

சர்வதேச அளவில் மாற்று திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களில் முதல் பிரிவு டோக்கியோவுக்குப் புறப்பட்டனர்.

கோடைகால ஒலிம்பிக்ஸை தொடர்ந்து டோக்கியோவில் வருகின்ற 24-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 4,400 பேர் வரவுள்ளனர். இந்தியா சார்பாக 14 பெண்கள் உட்பட 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.

இந்த அணிக்கு தமிழகத்தின் மாரியப்பன் தலைமையிலான முதல் அணி, இன்று அதிகாலை டெல்லியிலிருந்து டோக்கியோ புறப்பட்டது. இதையொட்டி விமான நிலையத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் மாரியப்பன், இந்த போட்டியிலும் மீண்டும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார். ஈட்டி எறிதல் வீரர் தேக்ஷன்த், வட்டு எறிதல் வீரர் வினோத்குமார் உள்ளிட்டோருடன் இந்திய பாராலிம்பிக்ஸ் அமைப்பினரும் டோக்கியோ சென்றனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன், பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். இந்த பெருமையை பெரும் முதல் தமிழக வீரர் மாரியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஒலிம்பிக்சில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்திய குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com