0,00 INR

No products in the cart.

25 வருட இசைப்பயணம்: யுவன் சங்கர் ராஜா கொண்டாட்டம்!

தனக்கு இந்தி தெரியாததன் காரணமாகவே ‘இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர ராஜா தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர்ராஜா திரைத்துறையில் இசையமைப்பாளராக 26 ஆண்டுகள் பணியாற்றியதைக் கொண்டாடும் வகையில், சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது;

எனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகி, இப்போது திரைத்துறை இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள்ளேன். இதுவரை விருதுகளை நோக்கமாகக் கொண்டு நான் இசையமைக்கவில்லை. அதனாலேயே எனக்கு முக்கிய விருதுகள் கிடைக்கவில்லை என்று வருந்தியதில்லை. நான் ‘இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்தது பற்றி பலரும் கேட்டனர். எனக்கு உண்மையிலேயே இந்தி தெரியாது என்பதால்தான் அப்படி அணிந்தேன். ஆனால் இந்தி திரையுலகில் லதா மங்கேஷ்கருடன் பணியாற்ற வேண்டும் என விரும்பினேன், அது முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

நடிகர் விஜய்யின்  மகன் ‘’யுவனிசம்’’ என டி-சர்ட் அணிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் விஜய் என்னை நேரில் சந்தித்தபோது, ‘’என் மகன் உங்கள் மீது வெறியன்’’ என கூறினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது

இசையமைப்பாளர்கள் வாழ்வின் ஓரிடத்தில் ஆன்மீகத்திற்கு திரும்புவது இயல்பான விஷயம்.. அந்த வகையில் நானும் என் அம்மாவின் இறப்புக்குப் பின்னர் ஆன்மிக்கத்தில் நாட்டம் கொன்டேன்.  விரைவில் நானும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன்.

-இவ்வாறு யுவன் சங்கர்ராஜா  தெரிவித்தார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பேரறிவாளன் விடுதலை; உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு!

0
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைதண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோர உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இன்று அந்த...

5 பரீட்சை பிட் பேப்பர்கள்; நாமக்கல் ஜெராக்ஸ் கடைகளில் பறிமுதல்! 

0
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ அளவுக்கு பரீட்சை பிட் பேப்பர்கள் கன்டறியப் ப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகம்...

TNPSC – குரூப் 2 தேர்வு; காலை 9 மணிக்கு பின் வந்தால் அனுமதியில்லை!

0
டிஎன்பிஎஸ்சி. குரூப்  2-வுக்கான தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாதம் 21-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி இம்மாதம்...

சமையல் எண்ணெய் அதிரடி உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை அடுத்து சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது: சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு அடுத்தபடியாக சமையல் எண்ணெய் விலை...

சர்வதேச துருக்கி குத்துச்சண்டை போட்டி: வெள்ளி வென்ற நிவேதாவுக்கு உற்சாக வரவேற்பு!

0
துருக்கியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நிவேதா இன்று சென்னை திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. துருக்கியில் இஸ்தான்புல்லில் வாகோ 7-வது சர்வதேச துருக்கி ஓபன் குத்துசண்டை...