உக்ரைன் எல்லையில் ராணுவம் கெடுபிடி: திருப்பி அனுப்பப்படும் இந்திய மாணவர்கள்!

உக்ரைன் எல்லையில் ராணுவம் கெடுபிடி: திருப்பி அனுப்பப்படும் இந்திய மாணவர்கள்!

உக்ரைனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் வகையில் உக்ரைன் எல்லைக்கு சென்றால் அங்கு சோதனைச் சாவடிகளில் ராணூவம் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாணவர்கள் வெலியிட்ட வீடியோவில் தெரிவித்ததாவது;

உக்ரைனுக்கும், போலந்துக்கும் இடையிலான ஷெஹினி-மெடிகா எல்லையில், சில இந்திய மாணவர்கள்  72 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கின்றனர். எங்களை உக்ரைன் ராணுவம் போலந்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் ஆண்களையும், பெண்களையும் பிரித்து வைத்துள்ளனர். 40 மணி நேரத்திற்குப் பிறகு சில பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அதன் பிறகு, ஒரு இந்தியர் கூட அனுமதிக்கப்படவில்லை. எங்களை மறுபடியும் பல்கலைக் கழகங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று கேட்டதற்கு இந்திய மாணவர்களை அடித்து உதைக்கிறார்கள்.

-இவ்வாறு தெரிவித்துள்ளனr.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com