ரேடியோ ஜாக்கிகளுக்கு எச்சரிக்கை; ஆபாசமாகப் பேசினால் நடவடிக்கை என மத்திய அரசு அறிவிப்பு!

ரேடியோ ஜாக்கிகளுக்கு எச்சரிக்கை; ஆபாசமாகப் பேசினால் நடவடிக்கை என மத்திய அரசு அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் எப்.எம். ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இவற்றில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சில ரேடியோ 'ஜாக்கி'கள் அநாககரிமாகவும் ஆபாசமாகவும் பேசுவதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்  அனைத்து எப்.எம். ரேடியோ நிறுவனங்களுக்கும் செய்துள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது;

'எப்.எம். ரேடியோ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி ஒப்பந்தத்தில், 'ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள், செய்திகள், விளம்பரங்கள் ஆகியவை அநாகரிகமாகவோ  ஆபாசமாகவோ சட்டத்திற்கு விரோதமாகவோ இருக்கக்கூடாது' என விதிகள் உள்ளன. ஆனால், பல எப்.எம். ரேடியோ ஜாக்கிகள் இந்த விதிமுறைகளை மீறி ஆபாசமான இரட்டை அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பிறர் மனம் புண்படும் வகையில், தரக்குறைவான விமர்சனங்களையும் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற செயல்களை தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதிமீறலில் ஈடுபடும் எப்.எம். நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com