உக்ரைன் போர் எதிரொலி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

உக்ரைன் போர் எதிரொலி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
Published on

உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில்,

கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து 110 டாலரை தொட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

இந்தியா உள்ளிட்ட 31 நாடுகளை உறுப்பினராக கொண்ட சர்வதேச எரிசக்தி முகமையில் 150 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் அவசர கால சேமிப்பாக உள்ளது. இதில் 6 கோடி பீப்பாய்கள் மட்டும் வெளியே எடுக்கப்பட உள்ளது. 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிப்பிலிருந்து எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் அவசர கால தேவைக்காக 3 கோடியே 90 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை 3 இடங்களில் நிலவறைக்குள் சேமித்து வைத்துள்ளது. இது 8 முதல் 9 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் போர் மேலும் தீவிரமடைந்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக வரும் ஏப்ரல் மாதத்தில் கூடுதல் கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து வாங்க பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com