14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கால்பந்து அணி விற்பனை; உக்ரைன் நிவாரணத்துக்கு அளிக்கப் போவதாக உரிமையாளர் அறிவிப்பு!

14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கால்பந்து அணி விற்பனை; உக்ரைன் நிவாரணத்துக்கு அளிக்கப் போவதாக உரிமையாளர் அறிவிப்பு!

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தனக்கு சொந்தமான கால்பந்து அணியை ரூ. 14 கோடிக்கு விற்கப் போவதாக ரஷ்யத் தொழிலதிபர் ரோமன் அப்ரோவிச் அறிவித்துள்ளார்.

கடந்த 1905-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட செல்சியா கால்பந்து அணியானது இங்கிலீஸ் பிரீமியம் லீக் கால்பந்தாட்டத்தில் மிகவும் பிரபலமானதாகும். இந்த அணியை 19 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரோமன் அப்ரோவிச் வாங்கினார். இந்த செல்சியா அணி கடந்த 25 ஆண்டுகளில் 5 முறை பிரீமியம் லீக் பட்டத்தையும்,7 முறை எப்.ஏ கோப்பையையும், 4 முறை லீக் கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும் உலக கோப்பை உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் போரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில், தனக்கு சொந்தமான செல்சியா கால்பந்து அணியை சுமார் 14,000 கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாக ரோமன் அப்ரோவிச் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த பணத்தைக் கொண்டு உக்ரைன் மக்களுக்கான அறக்கட்டளை ஒன்றை அமைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com