
நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, வசூலில் சக்கை போடு போடுகிறது. இந்நிலையில் அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வலிமை' படத்தைப் போல, இப்படத்தையும் ஹெச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லன் மாதிரியான கதாபாத்திரம் என இயக்குனர் வினோத் ஏற்கனவே அறிவித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்திற்காக அஜித் ஒரு புது கெட்டப்புக்கு மாறியுள்ளார். நரைத்த தலைமுடி, மீசை, நீண்ட தாடி, காதில் கடுக்கன் என அவரது தோற்றமே வேறு லெவலில் அட்டகாசமாக உள்ளது.
இந்நிலையில், இதே கெட்டப்பில் நேற்று அஜித் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் தன் மனைவி ஷாலினியின் கன்னத்தோடு கன்னம் இழைத்த ரொமான்டிக் புகைப்படம் ரசிகர்கள் லைக்ஸை அள்ளுகிறது. மேலும் அஜித் தன் குடும்பத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வைரலாகியுள்ளது.