சென்னை மேயராக பிரியா ராஜன் தேர்வு: அமைச்சர்கள் செங்கோல் வழங்க பதவியேற்பு!

சென்னை மேயராக பிரியா ராஜன் தேர்வு: அமைச்சர்கள் செங்கோல் வழங்க பதவியேற்பு!

Published on

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்ற நிலையில், சென்னை மேயராக ரிப்பன் மாளிகையில் பிரியா ராஜன் என்கிற ஆர்.பிரியா பொறுப்பேற்றார்.

சென்னை மேயர் பதவிக்கு ஆர்.பிரியாவும், மதுரை மேயர் பதவிக்கு இந்திராணியும் போட்டியிடுவதாக நேற்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகியில் தற்போது இருவரும் மேயராக பொறுப்பேற்றனர். சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு தமிழக நல்வாழ்வுத்துத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை அளித்தனர். முன்னதாக பிரியா ராஜனுக்கு, மேயருக்கான அங்கியை வழங்கினார் ஆணையர் ககன்தீப் சிங் பேடி.சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயர் பிரியா ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு இன்று  மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டி இல்லையெனில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com