தமிழ் சினிமாவில் சென்ற வருடம் வெளியான ‘காதம்பரி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அகிலா நாராயணன்.
இந்த படத்தை இயக்குனர் அருள் இயக்கி , அவரே கதாநாயகனாகவும் நடித்து வெளிவந்தது. அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த அகிலா நாராயணன், சமூக கருத்தை மையமாக கொண்டு திகில் படமாக வெளிவந்த ‘காதம்பரி’ படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றது.
இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் அகிலாவுக்கு சினிமா வாய்ப்புகள் பல வந்தாலும், அவர் அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்க ராணுவ வீரர்களின் சட்ட ஆலோசகராக பணியில் சேர்ந்துள்ள அகிலா, அமெரிக்காவில் ‘நைடிங்கேல் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ என்ற ஆன்லைன் இசை பள்ளியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற அடிப்படையில் அகிலாவின் புகைப்படங்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.