5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவு:  உ.பி-யில் 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு!

5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவு:  உ.பி-யில் 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தில் இன்று 54 தொகுதிகளுக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றூடன் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைகின்றன. இந்த தேர்தல் இம்மாதம் 10-ம் தேதியன்று வெலியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது:

உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர், மாவ், ஜழன்பூர், காஜிர்பூர், சந்தவ்லி, மிர்சாப்பூர், பாதோஹி மற்றும் சோனபத்ரா மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று 7-ம் கட்டமாக  இறுதிகட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதுவரை சுமார் 30 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.

-இவ்வாறு உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மினி மக்களவை தேர்தலாக கருதப்படும் இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ததால், அம்மாநில தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சியும் பொதுமக்களும் ஆவலாக  எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com