மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்; தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு!

மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்; தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு!
Published on

தூத்துக்குடியிலுள்ள தனியார் உரத் தொழிற்சாலையான ஸ்பிக் நிறூவனத்தில் மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து ஸ்பிக் நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்ததாவது.

தூத்துக்குடி முத்தியாபுரத்தில் அமைந்துள்ள ஸ்பிக் உரத் தொழிர்சாலையின் பயன்பாட்டுக்காக ரூ.150.4 கோடி செலவில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் தினமும் 22 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்  ஆண்டுக்கு 42 மி.யூனிட் மின்சாரத்தை இந்த மிதக்கும் சோலார் மின் நிலையம் மூலமாக உற்பத்தி செய்ய முடியும். அப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு ஸ்பிக் நிறூவனத்தின் க்ரீன் ஸ்டார் உரங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

-இவ்வாறு ஸ்பிக் நிறூவன அதிகாரிகள் தெஇவித்தனர். இதனிடையே, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞர் அரங்கம் அருகே 8 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com