நாரி சக்தி விருது: 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் இன்று வழங்கல்!

நாரி சக்தி விருது: 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் இன்று வழங்கல்!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு கடந்த இரு வருடங்களுக்கு சேர்த்து 29 பேருக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவா் இன்று வழங்குகிறாா்.

இதுகுறித்து மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் தெரிவித்ததாவது:

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, இம்மாதம் 1-ம் தேதி முதல் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டங்கள் டெல்லியில் தொடங்கி நடத்தப் பட்டது. அதன் முடிவில் இன்று சர்வதேச மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் கடந்த இரு வருடங்களுக்கான நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் வழங்ககவிருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இவ்விருதுகள் வழங்கப்படவில்லை.

சமூகத்தில் நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களுக்கு சிறப்புமிக்க சேவைகள் செய்தவா்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் 2020-ம் வருடத்துக்கு 14 விருதுகளும் 2021-ம் ஆண்டிற்கு 14 விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. 2020-ம் வருடத்துக்கான விருதில் தமிழகத்தின் கைவினைக் கலைஞரான ஜெயா முத்து, மற்றும் தோடா கைப்பின்னல் (எம்பிராய்டரி) கலைஞா் தேஜம்மா போன்றோர் கூட்டாகப் பெறுகிறாா்கள். 2021 ஆம் வருடத்துக்கான விருதுகள் பட்டியலில் தமிழகத்தைச் சோந்த மனநல மருத்துவா் மற்றும் ஆய்வாளரான தாரா ரங்கஸ்வாமி இடம்பெற்றுள்ளாா்.

மேலும் இந்த நாரி சக்தி விருதானது தொழில் முனைவோா், வேளாண் துறை, புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கலைகள் மற்றும் கைவினைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு, மொழியியல், தொழில்முனைவு, விவசாயம், சமூகப்பணி, கலை, கடல் வாணிகம், கல்வி, இலக்கியம், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்களுக்கு அளிக்கப்படுகிறது.

-இவ்வாறு மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com