0,00 INR

No products in the cart.

தமிழ்நாட்டின் பண்டரிபுரம்.. கோலாகல கும்பாபிஷேகம்!

– மஞ்சுளா சுவாமிநாதன்.

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் “ஶ்ரீ விட்டல்  ருக்மிணி சமஸ்தானம்”  ஆலயம் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக வைபவம் கடந்த ஜனவரி 27-ம் தேதி தொடங்கி, நாளை மறுநாள் (பிப்ரவரி 11) வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

மகாராஷ்டிர  மாநிலம் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் ஆலயம் எவ்வாறு உலக பிரசித்தி பெற்று விளங்குகிறதோ, அதே சாயலில் இந்த கோயிலும் அமைக்கப்பட்டு அதே அளவு சாந்நித்யத்தோடு  விளங்குகிறது.

காவிரி ஆற்றங்கரையில் ஒரு அரண்மனை போல வீற்றிருக்கும் இந்த கோயிலை நிறுவியவர்  ‘ஶ்ரீ விட்டல் தாஸ் மகராஜ்’. இங்கே கோயில் வளாகத்தினுள் பெரிய கோசாலை, பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் ஆகியவையும் பெரிய நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளது. அதனுள் அமைந்த ஆலயத்தில் அமைதியாக வீற்றிருக்கிறார்  ஶ்ரீ ருக்மிணி சமேதராக விட்டலன்.

பதினாறு நாட்கள் சிறப்பாக ஒரு திருவிழா போல நடக்கும் இந்த கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான வேத விற்பன்னர்களும், பாகவதர்களும், பக்தர்களும் வந்திருந்து பங்கேற்று இறை  அருளை பெறுகின்றனர். இந்த ஷேத்திரத்தை பற்றி மேலும் அறிய கல்கி ஆன்லைன் யூடியூப்  சேனலில் எங்கள் வீடியோவை காணவும்.

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இங்கிலாந்தின் துணை மேயர் மோனிகா சிறப்பு பேட்டி!

0
-லண்டனிலிருந்து கோமதி. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி! -என்ற பாரதியின் கனவை மெய்ப்பிக்கும் விதமாக சென்னையை தாயகமாகக் கொண்ட திருமதி. மோனிகா தேவேந்திரன்...

கோலாகலமாக நடந்த பட்டிணப் பிரவேச விழா!

0
- சங்கர் வைத்தியநாதன். தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் விழா நேற்றிரவு (மே 22) விமர்சையாக நடைபெற்றது.  தருமபுர ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். மயிலாடுதுறையில் 16-ஆம்...

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

0
-வீர ராகவன். பிரான்ஸ் நாட்டில் நேற்று (மே 17) கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழ்த் திரைத் துறை நட்சத்திரங்களான கமல்ஹாசன், மாதவன் மற்றும் இசைப்புயல் ஏஆர்...

குருவின் பல்லக்கு பவனி..வைபவத் திருநாள்!

0
-சக்தி சாமிநாதன். தருமபுர ஆதீனம் பட்டிணபிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குதலுக்கு தமிழக அரசு தடைவிதித்து, பின்னர் தடையை நீக்கி உத்தரவிட்டது. இச்சம்பவம்  இன்று, உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.  சுமார் 15-ம் நுற்றாண்டிலிருந்து...

100 நாட்களுக்குப் பின் மகள் வந்தாள்; நடிகை பிரியங்கா சோப்ரா!

0
பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கோலோச்சும் நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த தனது குழந்தையின் படத்தை முதன்முதலாக பகிர்ந்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனசும் கடந்த 5...