மதுரையில் மீன்பிடித் திருவிழா: உற்சாகமாய் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு!

மதுரையில் மீன்பிடித் திருவிழா: உற்சாகமாய் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு!
Published on

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலயபட்டி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மீன்பிடித் திருவிழா நடத்தப்படும். கடந்த 2 வருடமாக இத்திருவிழா கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நடத்தப்படாத நிலையில், இந்த வருடம் இன்ரூ வெகு விமரிசையாக தொடங்கியது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலயபட்டி கிராமத்தில் உள்ள பூத கருப்பு கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான கம்பளியான் கண்மாயில் மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கண்மாயில் மீன்களை பிடிப்பதற்காக நள்ளிரவு முதலே பொதுமக்கள் வந்து குவிந்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் 2 ஆயிரத்துக்கு மேறபட்ட பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.

அப்படி பிடிக்கப்பட்ட மீன்களை சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்டால் அந்த வருடம் விவசாயம் செழிக்கும் என்பது அந்த கிராமத்து நம்பிக்கை என்று தெரிவிக்கப் பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com