10 லட்சம் வாழ்த்து அட்டைகளை முதல்வருக்கு அனுப்புங்கள்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

10 லட்சம் வாழ்த்து அட்டைகளை முதல்வருக்கு அனுப்புங்கள்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. எனவே, வரும் விநாயகர் சதுர்த்தியன்று தமிழக பாஜகவினர், ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்புங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று தர்மபுரியில் நடந்த பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது;

திமுகவைப் பொறுத்தவரை, தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்காக மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசிடம் பயனற்று கிடக்கும் சொத்துக்கள் மட்டுமே குத்தகைக்கு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசு சொத்துக்கள் முழுதையும் விற்பதாக தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இந்த ஆண்டு மட்டுமல்ல, எந்த ஆண்டும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.
விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவை கண்டுகொள்வது இல்லை. எனவே, வருகிற விநாயகர் சதுர்த்தியன்று தமிழக பாஜகவினர், ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும்.

-இவ்வாறு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com