
சென்னையில் நேற்று (டிசம்பர் 30) கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், அதை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டை, தி.நகர். உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, மழைநீரை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையை 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது. அடுத்த பருவமழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
=இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து ''வானிலையைக் கணிக்கும் இயந்திரங்களை புதிதாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படுமா?'' என்ற கேள்விக்கு ''இதுகுறித்து மத்திய அரசிடம் நினைவூட்டப்படும்" என்று முதல்வர் தெரிவித்தார்.