10-வது மாடி பால்கனியில் மகனை துணியில் கட்டி தொங்க விட்ட தாய்: ஹரியானாவில் அதிர்ச்சி!

10-வது மாடி பால்கனியில் மகனை துணியில் கட்டி தொங்க விட்ட தாய்: ஹரியானாவில் அதிர்ச்சி!
Updated on

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில், ஒரு பெண் தன் மகனை சேலையில் கட்டி பால்கனிக்கு வெளியே அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பெண்ணின் செயலை எதிர் மாடியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அப்பெண்ணுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வீடியோவில், பெட்ஷீட்டில் சிறுவன் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளார். பத்தாவது மாடியில் பெட்ஷீட்டை தாய் பிடித்தப்படி இருக்க, அதில் பிடித்து தொங்கியவாறு சிறுவன் கீழே இறங்குகிறார்.

ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த த புடவையை எடுப்பதற்காகவே, அப்பெண் தன் மகனை கீழே இறக்கியது பின்னர் தெரியவந்தது. அச்சிறுவன் புடவையை எடுத்து வந்ததது, அப்பெண்ணும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து பெட்ஷீட்டை இழுக்க, அச்சிறுவன் மீன்டும் மேலேறி தன் வீட்டின் பால்கனிக்குள் நுழைவது தெரிய வந்துள்ளது.எனினும் தனது மகனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அப்பெண் இச்செயலில் ஈடுப்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com