10 அடி நீள தோசை; முழுதாய் சாப்பிட்டால் 71 ஆயிரம் ரூ பரிசு: டெல்லி உணவகம் அறிவிப்பு!

10 அடி நீள தோசை; முழுதாய் சாப்பிட்டால் 71 ஆயிரம் ரூ பரிசு: டெல்லி உணவகம் அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாள்ர்களை ஈர்ப்பதற்காக வினோத போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 10 அடி நீளத்தில் பேப்பெர் ரோஸ்ட் தோசை ஒன்றை விதவித  சைடு-டிஷ்களுடன் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பர்களுக்கு ரூ. 71 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்ற போட்டியை அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி டம்மி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான பதிவு இணையத்தில் வைரலாகியது.

அதில் தெரிவித்ததாவது:  இந்த் உண்வகத்தில்  தயாரிக்கப்படும் 10 அடி நீளமுள்ள தோசையை ஒரே நபர் 40 நிமிடத்துக்குள் முழுமையாக சாப்பிட்டு முடிக்க வேண்டும் . அப்படி சாப்பிட்டு அவருக்கு ரூ 71,000 பரிசு வழங்கப்படும்.
-இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களூக்கு மற்றுமொரு கண்டிஷன் – தோசையை முழுதாக சாப்பிடவில்லை என்றால் தோசையின் விலையான 1,500 ரூபாயை கொடுத்துவிட வேண்டும் என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் பலர் கலந்து கொண்டு தோல்வியுற்று தங்களது அனுபவங்களை சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com