100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு!

100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில், 100 பேருக்கு இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சியளிக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் தனது 71 வது பிறந்தநாளைக் கொண்டாடியபோது ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு, 100 ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது , ரஜினி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை வழக்கறிஞர் சத்யகுமார் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த்தின் இந்த அறக்கட்டளை மூலம் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். இதன்மூலம்

இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பதிவு செய்ய https://rajinikanthfoundation.or/tnpsc.html என்ற இணையதள முகவரியை பின்தொடரவும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com