உக்ரைனில் போர் பதற்றம்; அமெரிக்கர்களை நாடு திரும்பும்படி அதிபர் ஜோ பைடன் அழைப்பு!

உக்ரைனில் போர் பதற்றம்; அமெரிக்கர்களை நாடு திரும்பும்படி அதிபர் ஜோ பைடன் அழைப்பு!

உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் தீவிரம் அடைந்த நிலையில் அங்குள்ள அமெரிக்கர்களை உடனே சொந்த நாட்டுக்கு திரும்பும்படி அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. .இந்நிலையில் கடந்த நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய னேட்டோ படைகளும் ரஷ்யாவுக்கு அதிராக உக்ரைன் எல்லையில் குவிக்கப் பட்டுள்ளன. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் வாழ் அமெரிக்கர்களுக்கு அறிவித்ததாவது;

உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்துள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது போர் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் வாழ் அமெரிக்கர்கள் உடனே நாடு திரும்ப வேண்டும். உலகில் பலம்படைத்த ரஷ்ய ராணுவத்தை அமெரிக்க – ஐரோப்பிய படைகள் கையாளும் சூழ்நிலையில் போர் உள்ளிட்ட சில மோசமான விளைவுகளை ஏற்படக் கூடும். அதனால் முன்கூட்டியே அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும். ஏனென்றால் அமெரிக்கா, ரஷ்யா இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டால் அது உலகில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

-இவ்வாறு  அமெரிக்க  அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com