11 புதிய மருத்துவ கல்லூரிகள்: தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடக்கம்!

11 புதிய மருத்துவ கல்லூரிகள்: தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடக்கம்!

Published on

தமிழகத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப் பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நேரடி வருகை தவிர்க்கப் பட்டு இன்று காணோலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தமிழகத்தின் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணோலிக் காட்சி மூலம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவிக்கப் பட்டுள்லது. மேலும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுச்சேரியில் திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணி மண்டபம், ரூ 122 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி தொழில்நுட்ப மையம், மற்றும் 25-வது இளைஞர் திருவிழாவை பிரதமர் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com