0,00 INR

No products in the cart.

மேற்கு மாம்பலம் –டு- மெல்போர்ன்.. அசர வைக்கும் அற்புதக் காதல்!

பிரமோதா

ஆஸ்திரேலியாவின் அதிரடி கிரிக்கெட் வீரரான க்ளென் மேக்ஸ்வெல் மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் வின்னி ராமனை திருமணம் செய்யவுள்ளதுதான் இப்போது ஹாட்-டாபிக்! மார்ச் மாதம் 27-ம் தேதி நடக்கவுள்ள இவர்களின் திருமணப் பத்திரிகை தமிழ் முறைப்படி மஞ்சள் பத்திரிகையாக அடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான க்ளவுன் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடினார். இந்நிலையில், மீண்டும் மேக்ஸ்வல்லை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வின்னி ராமனின் சொந்த ஊர் சென்னை, மேற்கு மாம்பலம் ஆகும். ஆஸ்திரேலியாவில் ஃபார்மஸி படிப்பு முடித்து, அங்கேயே வின்னி வசித்து வந்த நிலையில், மேக்ஸ்வெல்லுடன் சந்திப்பு ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் காதலாக  மாறியது. சில ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட, அதையடுத்து இந்திய முறைப்படி 2020-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

‘’ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக உடனடியாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மார்ச் 27- தேதி மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதிகளின் திருமணத்தௌக்கு நாள் குறித்தோம்’’ என்கின்ற்னர் வின்னியின் பெற்றோர்.

‘’பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். நான் உண்மையிலேயே பாக்கியசாலிதான். எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், மீண்டும் ஐபிஎல் போட்டிக்காக  ஆர்சிபி அணிக்கு தேர்வானது டபுள் சந்தோஷம்’’ என்கிறார் கிளென். இந்த காதல் ஜோடிகளின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கோலாகலமாக நடந்த பட்டிணப் பிரவேச விழா!

0
- சங்கர் வைத்தியநாதன். தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் விழா நேற்றிரவு (மே 22) விமர்சையாக நடைபெற்றது.  தருமபுர ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். மயிலாடுதுறையில் 16-ஆம்...

இந்திய அணியின் அபார சாதனை!

தாமஸ் கோப்பை - 2022 -மஞ்சுளா சுவாமிநாதன் மே 15, 2022, இந்திய பேட்மின்டன் விளையாட்டு வீரர்களுக்கும், இந்தியர்களுக்கும் மறக்க முடியாத நாள். காரணம், அன்றுதான் உலக பிரசித்தி பெற்ற தாமஸ் கோப்பையை  முதன் முதலில்...

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

0
-வீர ராகவன். பிரான்ஸ் நாட்டில் நேற்று (மே 17) கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழ்த் திரைத் துறை நட்சத்திரங்களான கமல்ஹாசன், மாதவன் மற்றும் இசைப்புயல் ஏஆர்...

குருவின் பல்லக்கு பவனி..வைபவத் திருநாள்!

0
-சக்தி சாமிநாதன். தருமபுர ஆதீனம் பட்டிணபிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குதலுக்கு தமிழக அரசு தடைவிதித்து, பின்னர் தடையை நீக்கி உத்தரவிட்டது. இச்சம்பவம்  இன்று, உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.  சுமார் 15-ம் நுற்றாண்டிலிருந்து...

100 நாட்களுக்குப் பின் மகள் வந்தாள்; நடிகை பிரியங்கா சோப்ரா!

0
பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கோலோச்சும் நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த தனது குழந்தையின் படத்தை முதன்முதலாக பகிர்ந்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனசும் கடந்த 5...