54 புதிய சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு தடை விதிக்க முடிவு!

54 புதிய சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு தடை விதிக்க முடிவு!

Published on

சீனாவின் புதிய செயலிகளான ஆப் லாக், ப்யூட்டி கேமரா, உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமான சீன செயலிகளான டிக்டாக், வீசேட், ஹலோ உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்குத் கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. நாட்டின் இறையான்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த செயலிகளுக்கு தடை விதித்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவில் புதிதாக பிரபலமான ப்யூட்டி கேமரா, விவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகள், புதிய பெயர்களுடன் மீண்டும் இந்தியாவில் புழக்கத்தில் வந்துள்ளது கண்டறியப் பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com