செர்னோபில் அணுமின் நிலையம் மீட்கப் பட்டுவிட்டது: உக்ரைன் அரசு அறிவிப்பு!

செர்னோபில் அணுமின் நிலையம் மீட்கப் பட்டுவிட்டது: உக்ரைன் அரசு அறிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனிலுள்ள பிரசித்தி பெற்ற செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா சில நாட்களுக்குமுன் கைப்பற்றியது. இப்போது அந்த அணுமின் நிலையத்தை ரஷ்யாவிடமிருந்து மீட்டுவிட்டதாக உக்ரைன் அரசு சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து 19-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து செர்னோபில் அணு உலையின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை விரைந்து சரி செய்யாவிட்டால் கதிர்வீச்சு வெளியேறும் அபாயம் இருப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், அவர் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் 4 நாள்களுக்கு பிறகு ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த செர்னோபில் அணுமின்நிலையத்தை உக்ரைன் அரசு மீட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அணுசக்தி நிறுவனம் அறிக்கை அளித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குனர் தெரிவித்ததாவது;

செர்னோபில் அணூமின் நிலையத்தை உக்ரைன் அரசு மீட்டு விட்டதாக அந்நாட்டு அணுசக்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செர்னோபில் அணுமின் நிலையத்தில் பழுதான மின்இணைப்பின் ஒரு பகுதியை சரிசெய்துவிட்டதாகவும் தற்போது செர்னோபில் அணுமின் நிலையம் டீசல் ஜெனரேட்டரில் இயங்கி வருவதாகவும் விரைவில் உக்ரைன் அரசின் மின்துறை இணைப்பில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com