ஐபிஎல் மெகா ஏலம்; சுரேஷ் ரெய்னாவை அனைத்து அணிகளும் புறக்கணிப்பு!

ஐபிஎல் மெகா ஏலம்; சுரேஷ் ரெய்னாவை அனைத்து அணிகளும் புறக்கணிப்பு!

Published on

ஐபிஎல் 2022-க்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடந்தபோது, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் ஏன் எடுக்கவில்லை என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளை வென்று தந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்நிலையில் தோனி கடந்த 2020-ல் ஓய்வு பெற்ற போது, சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதையடுத்து 2020 ஐபிஎல் தொடரின் போது சென்னை அணியில் இருந்து ரெய்னா திடீரென்று வெளியேறினார். கடந்த சீசனிலும் ரெய்னா சென்னை அணியில் இடம் பிடித்தாலும் தனது பழைய பேட்டிங் பார்மை இழந்ததால், அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த சீசனுக்கு ரெய்னாவை சிஎஸ்கே தக்கவைக்கவில்லை. இதனால், ரெய்னாவை மற்ற அணிகள் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெய்னாவை எந்த அணியும் மெகா ஏலத்தில் எடுக்கப் படாததால் அவரை அனைத்து அணிகளும் புற்க்காணித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com