மகன் கல்யாணத்தில்  மாட்டு வண்டி பந்தயம்; விளாத்திகுள்ம் முன்னாள் மாட்டு வண்டி பந்தய வீரர் அசத்தல்!

மகன் கல்யாணத்தில் மாட்டு வண்டி பந்தயம்; விளாத்திகுள்ம் முன்னாள் மாட்டு வண்டி பந்தய வீரர் அசத்தல்!

Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இளம் வயதில் மாட்டுவண்டி பந்தய வீரரான இவர், தனது மகன் முத்து பாண்டியின் திருமணத்தின்போது, மாட்டு வண்டி பந்தயம் நடத்த விரும்பினார். தை தனது சொந்த கிராமத்தில் சிறப்பாக நடத்தினார்.

இதையடுத்து 'மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கு' ஆறுமுகசாமி ஏற்பாடு செய்ய, பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன. விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் இளவரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து பெரிய மாடுகள் சுற்றில் 19 மாட்டு வண்டிகளும், சிறிய மாடுகளுக்கான சுற்றில் 21 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டிவந்த சாரதிகளுக்கும் ஆறுமுகசாமி குடும்பத்தினர் சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com