சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொலை: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!

சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொலை: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கல், மர்ம கும்பலால் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்று அபாரமாக விளையாடி சர்வதேச புகழ் பெற்றவர் சந்தீப் நங்கல். மேலும் இவர் கபடி கூட்டமைப்பு ஒன்றையும் நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில் நேற்று மாலை நடந்த கபடி போட்டி சந்தீப் நங்கல் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சந்தீபை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொன்றூவிட்டு தப்பியோடியது. சந்தீபின் தலை மற்றும் மார்பு சுமார் 20 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்தப் படுகொலைக்கு கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு இருந்த பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தீப் நங்கலின் ரசிகர்கள் அவருக்கு சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com