‘தி காஷ்மீர்ஃபைல்ஸ்’ திரைப்படம்: தமிழக பிஜேபி சார்பில் சென்னையில் சிறப்புக் காட்சி!

‘தி காஷ்மீர்ஃபைல்ஸ்’ திரைப்படம்: தமிழக பிஜேபி சார்பில் சென்னையில் சிறப்புக் காட்சி!

காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'  என்ற படத்தின் சிற்ப்புக் காட்சியை தமிழக பாஜக சார்பில் நாளை (மார்ச் 16) வெளியிடப் போவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த 1980-க்கும் 90-க்கும் இடைப்பட்ட காலத்தில், காஷ்மீரில் இந்துக்கள் மற்றும் இந்து பண்டிட்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்து மதத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் காஷ்மீரில் அமைந்துள்ள இஸ்லாமிய வழிபாட்டு தளங்களில் உள்ள ஒலிபெருக்கி மூலமாகவும், இந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான இந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளுக்கும், அருகில் உள்ள மாநிலங்களுக்கும் தஞ்சமடைந்தனர்.

இந்த சம்பவம் அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 11-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு வட இந்தியாவில் பல மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளன. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்' படத்தை நாளை (மார்ச் 16) சென்னை ரோகிணி தியேட்டரில் தமிழக பிஜேபி கட்சி சார்பில் வெலியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது;

தமிழக பிஜேபி கட்சி சார்பில் மார்ச் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னையிலுள்ள  ரோகிணி சில்வர் ஸ்க்ரீன்ஸில் 'தி காஷ்மீர் .பைல்ஸ்' திரைப்படத்தின் சிறப்புத் காட்சி வெளியிடப்பட உள்ளது. இதைக் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நமது தேச வரலாற்றின் இருண்ட காலம் குறித்த இந்த முக்கியமான திரைப்படம் நம் கவனத்திற்கு உரியது.

-இவ்வாறு பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com