0,00 INR

No products in the cart.

மாறன் – நேர்மைக்கு சல்யூட்!

— ராகவ் குமார்.

நாம் அன்றாடம்  பொதுவெளியில் பேசும் அரசியல் குற்றங்ககளை வைத்து அதை சஸ்பென்ஸ் திரில்லர் வகையில்  ‘மாறன்’ படத்தில் சொல்லிருக்கிறார் கார்த்திக் நரேன்.

பத்திரிகை நிருபரான ராம்கி ஒரு “கல்வி தந்தை” நடத்தும் பள்ளியின் பின்புலத்தில் உள்ள குற்றத்தை செய்தித்தாளில் வெளிக்கொண்டுவர முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் ராம்கி கொல்லப்படுகிறார். இதை பார்க்கும் சிறு வயது மகன் தனுஷ் பின்னாளில் தானும் பத்திரிகையாளர் ஆகிறார்.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்து தவறான வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கும் அரசியல்வாதி  சமுத்திரக்கனியின் திட்டங்களை மீடியாவில் அம்பலபடுத்துகிறார்.இதனால் கோபமுறும் சமுத்திரகனி தனுஷிற்கு பல்வேறு பிரச்சனைகளை தருகிறார்.

ஒரு கட்டத்தில் தனுஷின் தங்கை எரித்து கொலை செய்யபடுகிறார்.

ஆனால் கொல்லப் பட்டது தனது தங்கை அல்ல என்று பின்னர் தெரிய வருகிறது.

கிளைமாக்ஸ் வரை பரபரப்புடன் கதையை நகர்த்தி இருக்கிறார் டைரக்டர்.படத்தின் முதல்  பாதி காதல், செண்டிமெண்ட் என்று நகர்ந்ந்தாலும் பின் பாதியில் வரும் ட்விஸ்ட் ஓரளவு கை தருகிறது. தனுஷ் காதல், துள்ளல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து எக்ஸ்பிரஷனிலும் அசர வைக்கிறார்.மாளவிகா மோகனன் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்துஇருக்கிறார்.ஸ்மருதி  நம் வீட்டு தங்கையை நினைவு படுத்தி விடுகிறார். சமுத்திரக்கனி அட்வைஸ் செய்யாமல் வில்லனாக பயமுறுத்துகிறார். அமீர் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசை பெரிய பலத்தை படத்திற்கு தரவில்லை. திரைக்கதையை வலுவாக கட்டமைத்து, தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் கார்த்திக் நரேனுக்கு இது இன்னொரு ‘துருவங்கள் பதினாறாக’ அமைந்து இருக்கும்.

மாறன் -நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு சல்யூட்! – ராகவ் குமார்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...