15 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மர்ம நபர்கள் ஹேக் செய்தது கண்டுபிடிப்பு!

15 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மர்ம நபர்கள் ஹேக் செய்தது கண்டுபிடிப்பு!
Published on

தமிழகத்தில் பிரபலயூடியூப் சேனல்களான பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட 15 சேனல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் முடக்கப் பட்டுள்ளன. ஒரேநாளில் ஒட்டுமொத்தமாக இந்தசேனல்கள் மொத்தமாக ஹேக் ஆகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியானதகவல்கள்:

தமிழில் வெளியாகும் 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. குக்வித்கோமாளிகனியின் சேனல் உட்பட சில சமையல் தொடர்பானசேனல்களும் முடக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஹேக்செய்யப்பட்ட சேனல்கள் அனைத்திலும் கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் இடம் பெற்றதால், கிரிப்டோகரன்சி தொடர்பான குழு இந்த சேனல்களை ஹேக்கிங்கை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com