சீனாவில் கொரோனா அதிகரிப்பு: பல மாகாணங்களில் முழு லாக்டவுன்!

சீனாவில் கொரோனா அதிகரிப்பு: பல மாகாணங்களில் முழு லாக்டவுன்!

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத வகையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால, பல மாகாணங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன அரசு தரப்பில் வெளியான தகவல்:

சீனாவின் வடகிழக்கு மாகாணமான  ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் நகரில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கொரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆகையால், 90 லட்சம் பேர் கொண்ட அந்த மாகாணம் முழுமைக்கும் ஊரடங்கை அமல்படுத்தப் பட்டுள்ளது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடப் பட்டுள்ளது.

இந்த நகரத்தில் 3 வாரங்களுக்கு முன்னால் வெறும் 100 பேருக்கு மட்டுமே தொற்று இருந்தநிலையில் திடீரென அன்றாட பாதிப்பு 1,369 என்ற அளவை எட்டியுள்ளது. பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் திரிபு தொற்றியுள்ளதாகவே சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஜிலின் மாகாணத்தின் சேங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்கள் ஊரடங்கில் உள்ளன. ஷாங்காய் நகரில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளன. தலைநகர் பீஜிங்கிலும் பல்வேறு குடியிருப்புகளிலும் பகுதிநேர அல்லது முழு ஊரடங்கு அமலில் உள்ளன.

-இவ்வாறு சீன அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஷாங்காய் என்பது சீனாவின் மிகப்பெரிய வர்த்தக நகரம். அங்கு ஒருநாள் ஊரடங்கு என்பதே பெரியளவில் பொருளாதார இழப்பை உருவாக்கும். இந்நிலையில் தொடர்ச்சியாக பெரிய அளவிலான முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் சீன விஞ்ஞானிகளுக்கு அரசுக்கு வழங்கிய அறிவுரையில் எதற்கெடுத்தாலும் ஊரடங்கு முடிவை கையிலெடுக்காமல் மற்ற நாடுகளைப் போலவே வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com