13 பேர் கிணற்றில் தவறி விழுந்து பலி; உத்திரபிரதேச திருமண விழாவில் சோகம்!

13 பேர் கிணற்றில் தவறி விழுந்து பலி; உத்திரபிரதேச திருமண விழாவில் சோகம்!

உத்தரப் பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் நடந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் கிணற்றில் தவறி விழுந்து பலியானது பெஉம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் குஷிநகர் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த ஒரு திருமண விழாவின்போது, இவ்விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் சிலர் அங்கிருந்த ஒரு  கிணற்றின் மீது போடப்பட்ட சிமென்ட் மூடி மீது அமர்ந்தனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த ஸ்பாப் உடைந்தது. அதில் நின்றிருந்தவர்கள் கிணற்றில் விழுந்தனர்சிமென்ட் மூடி உடைந்து அதன்மீது அமர்ந்திருந்தவர்கள் கிணற்றினுள் விழுந்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் உடபட 13 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என குஷிநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன டிவிட்டரில்  "உ.பி. விபத்துச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இச்சம்பவம் தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் நேற்றிரவு, தனது ட்விட்டரில், மீட்புப் பணிகளை முடுக்கிவிடவும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com