4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!

4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு உடபட்ட குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு உடபட்ட குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். இந்த விதிமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அதற்குள் குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தலைகவசங்களை தயாரிக்கும்படி ஹெல்மெட் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்டக்கூடாது. விதிகளை மீறினால் ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் ஒட்டுனர் உரிமர் ரத்து செய்யப்படும்.

-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த புதிய விதி, அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com