பிப்ரவரி 28-ல் முதல்வரின் நூல் வெளியீட்டு விழா; ராகுல் காந்தி பங்கேற்பு!

பிப்ரவரி 28-ல் முதல்வரின் நூல் வெளியீட்டு விழா; ராகுல் காந்தி பங்கேற்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' என்ற நூல் வெளியீட்டு விழா, இம்மாதம் 28-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக ராகுல் காந்தி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45-வது புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நான் எழுதியுள்ள 'உங்களில் ஒருவன்' நூலின் முதல்பாகம் இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. எனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் பதிவு செய்துள்ளேன். இளமைக் காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரிக் காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரையிலான பதிவுகளுடன் முதல் பாகமாக அதை எழுதியுள்ளேன். விரைவில் புத்தகக் கண்காட்சிக்கும் அந்த நூல் விற்பனைக்கு வரும்.

-இவ்வஅறு முத்லவர் ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தேசிய தலைவர் ராகுல் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com