குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவு; இந்திய தூதரகம் முன்பு பெண்கள் போராட்டம்!

குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவு; இந்திய தூதரகம் முன்பு பெண்கள் போராட்டம்!

குவைத் நாட்டு பெண்கள் ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய தூதரக அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் 'அல்லாஹு அக்பர்' என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து வெளியான தகவலில் தெரிவிக்கப் பட்டதாவது;

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை மாணவர்கள் அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக மாநிலை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்தியாவில் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து குவைத் நாட்டின் இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்திதைச் சேர்ந்த பெண்கள் அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தம் கைகளில் 'அல்லாஹு அக்பர்' (இறைவனே மிகப்பெரியவன்) என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் என்பது கு றிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com