நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; திமுக-வுக்கு ஓட்டு கேட்டு சிக்கலில் சிக்கிய வெளிநாட்டுக்காரர்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; திமுக-வுக்கு ஓட்டு கேட்டு சிக்கலில் சிக்கிய வெளிநாட்டுக்காரர்!

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக ருமேனியா நாட்டை சேர்தவர் வாக்கு சேகரித்த விவகாரத்தில், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவருக்கு சென்னை சாஸ்திரி பவனில் உள்ள குடியேற்றத் துறை (Immigration) நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்ற ரூமானியா நாட்டுக்காரர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொழில் நிமித்தமாக ரூமானியா நாட்டில் இருந்து கோவை வந்துள்ளதாக தெரிவித்த  ஸ்டெஃபன், தோளில் தி.மு.க துண்டு, கையில் உதயசூரியன் சின்னத்துடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். வெளிநாட்டுக்காரரான ஸ்டெபன், விசா விதிமுறைகளை மீறி அரசியல் பிரசார்த்தில் ஈடுபட்டதால், என்பதால், மத்திய இமிகிரேசன் துறை அவருக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அப்படி வரத்த்வறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com