18 வருட திருமண வாழ்க்கை முடிந்தது; பரஸ்பரம் பிரிவதாக அறிவித்த நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா!

18 வருட திருமண வாழ்க்கை முடிந்தது; பரஸ்பரம் பிரிவதாக அறிவித்த நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா!

Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மற்றூம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷூக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனுஷை விட ஐஸ்வர்யா 2 வயது மூத்தவர் என்பது குறீப்பிடத் தக்கது. இத்தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில்,தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் மற்றும் பாலிவுட், ஹாலிவுட்டிலும் வெற்றிகரமாக முத்திரையை பதித்து வரும் தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யாயும் தங்களது 18 வருடகால் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக,நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:

18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும்,ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் இணைந்து பயணித்து வந்தோம்.இந்த வாழ்க்கை பயணத்தில் வளர்ச்சி,புரிதல்,சரிசெய்தல் மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம்.ஆனால்,இன்று நாங்கள் வாழ்க்கை பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.மேலும் எங்களை நாங்களே புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து,இதிலிருந்து நாங்கள் இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தையும்,தேவையான தனியுரிமையையும் எங்களுக்கு வழங்கவும்.

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார், இதே கருத்தை ஐஸ்வர்யாவும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இசசம்பவம் திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com