தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வேட்பாளர்களுக்கான தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வேட்பாளர்களுக்கான தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் இன்று ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள்ளும், வாக்குசாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் வாக்குசேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • வாக்காளர்களை நிர்பந்திப்பது, மிரட்டுவது, வாக்காளர்களை வாக்குச்சாவடி செல்லவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
  • வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் அலுவலகங்களை அமைக்கக் கூடாது. வாக்குச்சாவடிக்கு அருகில் எந்தவித அறிவிப்பையும், அச்சடித்தோ, கையால் எழுதியோ ஒட்டக்கூடாது.
  • ஒலிபெருக்கி மூலமாக ஓசை எழுப்புதல், கூச்சல் மற்றும் குழப்பம் ஏற்படுத்தும் தகாத நடவடிக்கைகளில் வேட்பாளர்களோ அவர்களது ஆதரவாளர்களோ ஈடுபடக் கூடாது. தேர்தல் நாளில் வாக்காளர்களுக்கு உணவு, மது மற்றும் போதை பொருட்களை வேட்பாளர்கள் வழங்கக்கூடாது.
  • வாக்குச்சாவடி செல்வதற்கு வாக்காளர்களுக்கு வாகன வசதிகளை வேட்பாளர்கள் ஏற்படுத்தித் தருவது தடை செய்யப்பட்டதாகும். வாக்குச்சாவடியைப் பொறுத்தவரை வாக்கெடுப்பு பணியாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர், வாக்குச்சாவடி முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • வாக்காளர்கள், தாம் அழைத்து வரும் கைக்குழந்தைகளும் உள்ளே செல்லலாம். மாற்றுத்திறனாளி, பார்வையில்லா வாக்காளர்களுடன் வரும் உதவியாளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • வாக்காளர்களை அடையாளம் காட்டும் பொதுப் பணியாளர்,வாக்குச்சாவடி தலைமை காவலர் அழைத்தால் வரும் காவலர், மாநில அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரியால் அனுமதிக்கப்பட்ட நபரும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

-இவ்வாரூ மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com