19 ஆண்டுகளுக்குப் பின் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு!

19 ஆண்டுகளுக்குப் பின் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு!

கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசியானது 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஏற்பட்டதையடுத்து, ஸ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதர் கோவிலின் சொர்க்க வாசல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஶ்ரீரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3- ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் பகல் பத்து தினம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று பரமபத வாசல் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப் பட்டது. இதையடுத்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் கடந்து சென்றார். பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார்.ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

செர்க்கவாசல் திறப்பின் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்துகொண்டு நம்பெருமாள் தரிசனம் செய்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com