20 ஆயிரம் கோடி ரூபாய்: மத்திய அரசிடம் கேட்க தமிழக மின் வாரியம் முடிவு!

20 ஆயிரம் கோடி ரூபாய்: மத்திய அரசிடம் கேட்க தமிழக மின் வாரியம் முடிவு!

மின்சார விநியோகத்தை நாடு முழுவதும் தடை இல்லாமல் சீராக செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மத்திய அரசு புதிய மின்சார விநியோக திட்டத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 3.03 லட்சம் கோடி ரூப மதிப்பிலான இத்திட்டத்தை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திடத்தின்கீழ் மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி கேட்க தமிழக மின்வாரியத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மின்வாரியத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மின் திட்டத்தில் இரு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவின்கீழ் புதிய துணை மின் நிலையம் அமைத்தல், மின் வழித்தடம் அமைத்தல், மின் வழித்தடங்களில் மீட்டர் பொருத்துதல், மின் இணைப்புகளில் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்துதல் போன்றவை அடங்கும். 2-வது பிரிவின்கீழ் ஊழியர்களுக்கு பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் செயல்படுத்தப்படும். இந்நிலையில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்திற்குள் திட்ட பணிகளை முடிப்பதற்கு 60 சதவீதம் மானியமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி கேட்க தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை, இம்மாதத்திற்குள் தமிழக மின் வாரியம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com